முகநூலில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
முகநூலில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் மதியழகன்(வயது 24). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றியதாக விழுப்புரம் மகிளா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மதியழகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த அவர் விஷம் குடித்து விட்டு அதை முகநூலில் பதிவிட்டு மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்து ஓடோடி வந்த அவரது உறவினர்கள் மதியழகனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story