நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:22 PM IST (Updated: 18 Dec 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல், டிச.19-
நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமையல் கட்டிடங்கள்
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்கள் ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி, கல்வி துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கொண்டு கண்டறியப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இதுவரை 74 பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத 44 பள்ளி கட்டிடங்கள், 5 பள்ளி கழிவறைகள், 23 சமையல் கட்டிடங்கள், தலா ஒரு சமுதாயக்கூடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, காதிகிராப்ட் கட்டிடம், 2 சிமெண்டு தண்ணீர் தொட்டிகள், ஒரு ஆசிரியர் குடியிருப்பு கட்டிடம் உள்பட 80 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சிறு பழுதுகள்
மேலும் தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை என்ஜினீயர்கள், பொதுப்பணித்துறை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கண்டறியும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 14 பழுதடைந்த பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள கட்டிடங்களை இடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 218 பள்ளி வளாகங்களில் 269 சிறு பழுதுகள் உள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இதுவரை 23 கட்டிடங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. 
எந்தவொரு பழுதான கட்டிடமும் தற்போது பயன்பாட்டில் இல்லை மற்றும் பழுதடைந்த கட்டிடங்களுக்கு குழந்தைகள் செல்லா வண்ணம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அப்புறப்படுத்த வேண்டிய பயன்பாட்டில் இல்லாத அனைத்து கட்டிடங்களும் மிக விரைவில் முழுமையாக இடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story