திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஓய்வறை கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள்


திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஓய்வறை கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:23 PM IST (Updated: 18 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஓய்வறை கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபி தலைமையில், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் செபஸ்தியார் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அப்போது காந்தி மார்க்கெட்டில் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நுழைவுவாயில் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், காந்தி மார்க்கெட் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நுழைவுவாயில் அருகே ஓய்வறை உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வருவதை கண்காணித்து இறக்க வசதியாக உள்ளது. ஆனால் தற்போது மார்க்கெட்டில் பின்பகுதியில் ஒரு மூலையில் ஓய்வறை ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பழைய இடத்திலேயே ஓய்வறை இருக்க வேண்டும் என்று 5 முறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுவிட்டோம். இதுவரை உறுதியான தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றனர்.

Next Story