அ.தி.மு.க.வினர் 950 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க.வினர் 950 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Dec 2021 10:27 PM IST (Updated: 18 Dec 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் 950 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி:
தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் உரிய அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி அ.தி.மு.க.வினர் 950 பேர் மீது தென் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story