தனியார் பஸ் மோதியது 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


தனியார் பஸ் மோதியது 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:32 PM IST (Updated: 18 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாயக்கூட சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதியதில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கபிஸ்தலம்:-

சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாயக்கூட சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதியதில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுற்றுச்சுவரில் மோதியது

தஞ்சையில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரகுராமன்(வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். 
சுவாமிமலை அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் ரெயில்வே கேட் எதிர்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மோதியது. 

50 பயணிகள் உயிர் தப்பினர்

இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
சுற்றுச்சுவரில் மோதியதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. விபத்து நடந்தவுடன் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story