சின்னசேலம் அருகே மின் ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது


சின்னசேலம் அருகே  மின் ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 10:46 PM IST (Updated: 18 Dec 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மின் ஊழியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது


சின்னசேலம்

சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை இந்திலி முருகன் கோயில் அருகே  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா(வயது 25) என்பதும், தற்போது கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருவதும், எரவார் கிராமத்தை சேர்ந்த மின் ஊழியர் பழனிமுத்து வீட்டில் புகுந்து நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பரிமளாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5¼ பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story