இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம்


இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:40 PM IST (Updated: 18 Dec 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

லத்தேரி பஸ் நிலையத்தில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த விழுந்தக்கால் கிராமத்தில் இழுப்பாட்சியம்மன் கோவில் உள்ளது. 

இக்கோவிலில்  காணும் பொங்கல் பண்டிகையின்போது திருவிழா நடப்பது வழக்கம். அங்கு, பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தி.மு.க. கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பக்தர்களும், கிராம மக்களும் இணைந்து லத்தேரி பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வின் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும், எனக் கோரி விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் காவி கொடியை ஏந்தியிருந்தனர். 

போராட்டத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் சரண்யா மற்றும் லத்தேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story