வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் திடீர் மறியல்


வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் திடீர் மறியல்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:41 PM IST (Updated: 18 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் நடந்தது.

தூசி

தூசி அருகே வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் நடந்தது. 

செல்போன் தொழிற்சாலை

சென்னை ஒரகடம் பகுதியில் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 

அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அந்தப் பெண் தொழிலாளர்களில் பலர் காஞ்சீபுரம், பூந்தமல்லி, செய்யாறு ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளில் தங்கி உள்ளனர்.

கடந்த 15-ந்தேதி பூந்தமல்லி மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் மதிய உணவு சாப்பிட்டபோது, தரமில்லா உணவால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை, காஞ்சீபுரம், பூந்தமல்லி போன்ற மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அதில் ஒருசிலர் குணமடைந்து வீடு திரும்பினர். 8 பெண்களை காணவில்லை. அவர்கள் மாயமாகி விட்டதாக விடுதி நிர்வாகம் கூறி வருகிறது. 

சாலை மறியல்

தூசி அருகே உள்ள இரு விடுதி பெண்கள் நெற்று காலை 10.30 மணி அளவில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் அங்குள்ள ஐயங்கார் குளம் கூட்ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், மாயமான 8 பெண் தொழிலாளர்களின் நிலை என்ன? என்பதை விடுதி நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், வெம்பாக்கம் தாசில்தார் சத்தியன், தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் சமரசம் ஏற்பட்டதும் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது.

Next Story