கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:41 PM IST (Updated: 18 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் மூலம் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகின்றனர். 

இவர்களுக்கு காலையில் 422 வழித்தடம் எண் கொண்ட திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ் சரியான நேரத்தில் வருவதில்லை என்றும், சில நாட்கள் பஸ் வருவதே இல்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

 இந்த நிலையில் நேற்று காலையில் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story