திருச்சி மின்வாரிய டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது


கரூர்
x
கரூர்

திருச்சி மின்வாரிய டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை வாட்போக்கி நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 42). இவர் திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது வீட்டின் அருகே உள்ள சீனிவாசன் என்பவரது மனைவி அன்னக்கிளி (55), மகன் கோபாலகிருஷ்ணன் (35) என்பவர்களது குடும்பத்தாருக்கும் இடையே கழிவுநீர் சாக்கடை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று மாணிக்கவாசகம் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியே ஊற்றியுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 
இதில் கோபாலகிருஷ்ணனால் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த மாணிக்கவாசகம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மாணிக்கவாசகத்தின் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் இதை கொலை வழக்காக பதிவு செய்த குளித்தலை போலீசார் கோபாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனின் தாயார் அன்னக்கிளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Next Story