குளச்சல் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி
குளச்சல் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
குளச்சல்,
குளச்சல் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நிலத்தை அபகரிக்க முயற்சி
குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு இயற்கை உரம் தயாரிக்கும் குப்பை கிடங்கு லியோன் நகரின் மேற்கு பகுதியில் உள்ளது. இதன் அருகில் அரசு குவாரி புறம்போக்கு நிலம் உள்ளது. இது 1.70 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த பகுதி சைமன் காலனி கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்டதாகும். இந்தநிலையில் இந்த நிலத்தை கும்பல் ஒன்று சமன் செய்து அபகரிக்க முயற்சித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று காலை புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறையை தொழிலாளர்கள் சிலர் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். இதுபற்றி தகவலறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்.
போலீசில் புகார்
பின்னர் நிலத்தை அபகரிக்க முயன்ற பகுதியை சைமன்காலனி கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், அ.தி.மு.க. பிரமுகர் அரசு புறம்போக்கு நிலத்தை அபகரிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story