கோவிலில் நகை திருட்டு


கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2021 2:51 AM IST (Updated: 19 Dec 2021 12:00 PM IST)
t-max-icont-min-icon

மூன்றடைப்பு அருகே கோவிலில் நகை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே தோட்டாக்குடியில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் அந்த கோவில் கதவு பூட்டை உடைத்து 5 கிராம் மதிப்புள்ள தங்க தாலிப்பொட்டு மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் கருப்புகட்டி என்ற ஊரிலும் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story