மாணவிக்கு இன்று நடக்க இருந்த நிச்சயதார்த்தம்


மாணவிக்கு இன்று நடக்க இருந்த நிச்சயதார்த்தம்
x
தினத்தந்தி 19 Dec 2021 3:41 AM IST (Updated: 19 Dec 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

தோவாளையில் பிளஸ்-1 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:
தோவாளையில் பிளஸ்-1 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிக்கு நிச்சயதார்த்தம்
தோவாளை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி, தனது பெற்றோருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும்.
இந்தநிலையில் மாணவிக்கு திருமணத்தை நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து மாணவிக்கும், வள்ளியூரை சேர்ந்த 31 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதுசம்பந்தமான புகார் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சைல்டு லைனுக்கு சென்றது. 
தடுத்து நிறுத்தம்
பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாணவிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரிய வந்தது. பின்னர் இருவீட்டாரையும் எச்சரித்த அதிகாரிகள், மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் மாணவிக்கும், வாலிபருக்கும் நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story