ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
நாகர்கோவில்:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று 555 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நாகர்கோவிலில் நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங்கள், வேப்பமூடு மாநகராட்சி பூங்கா ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 52 வார்டுகளிலும் தடுப்பூசி செலுத்தாதவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது. ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்களை விட 2-வது கட்ட தடுப்பூசியை நேற்று அதிகமானோர் செலுத்திக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் 32,273 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு குமரி மாவட்டத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து இதுவரை 60,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story