உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது
உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது
அவினாசி,
அவினாசி ஒன்றியம் நடுவச்சேரியில் ரோடு போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது என்றும் அதை உடனி.யாக புதுப்பித்து தரவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தகவலறிந்து அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடம் வந்து உண்ணாவிரதம் இருந்தவர்களிடம். ரோடு புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குண்டான மதிப்பீட்டுநிதி. கிடைத்தவுடன் பணி துரிதமாக செயல்படுத்தப்படும்' எனவே உண்ணாவிரதத்தை கை விடுமாறு சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் உண்ணாவிரதம் மேற்கொண்ட வர்கள் எழுத்து வடிவில் உறுதியளிக்குமாறு கேட்டனர். அதற்கு அரசு அலுவலர்கள் அதுமாதிரி எழுதித்தர முடியாது என்ற தால் பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர். எனவே 15 பெண்கள் உள்ளிட்ட 34 நபர்களைஅவனா சி போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்..அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் சாப்பிட மறுத்தனர்.
Related Tags :
Next Story