ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்


ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 19 Dec 2021 5:15 PM IST (Updated: 19 Dec 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த 25 வயது இளம்பெண், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 

இவர், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

எனக்கு, சமூக வலைத்தளத்தில் ராஜ் என்பவர் அறிமுகமானார். 3 மாதமாக இருவரும் பழகினோம். சில வாரங்களாக அவர், எனது ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டி ரூ.50 ஆயிரம் கேட்டார். இதனால் பயந்துபோன நான், ரூ.20 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன். ஆனால் மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி விசாரித்த போலீசார், தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் (29) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், சமூக வலைதளத்தில் இளம்பெண்ணிடம் நட்பாக பழகி, பிறகு காதலிப்பதாக கூறி அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாங்கி, அதன்பிறகு அந்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக பணம் கேட்டு மிரட்டியதும், தனது பெயரை மாற்றி கூறி இளம்பெண்ணிடம் பழகியதும் தெரிந்தது. கைதான மனோஜ்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story