குவிந்து கிடக்கும் குப்பை
குவிந்து கிடக்கும் குப்பை
குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் காட்டுப்பாளையம் பகுதி முத்தணம்பாளையம்மெயின் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் ஓரம் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளன. எனவே குப்பையை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி திலகர்நகர் முதல் வீதியை அடுத்து ரேஷன் கடை உள்ளது. இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றார்கள். பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி தேங்கி நிற்கும் கழிவுநீரையும், குப்பைகளையும் அகற்ற வேண்டும்
புதர் மண்டிக்கிடக்கும் சாலை
தாராபுரம் நஞ்சியம்பாளையம் வெற்றி நகரில் 150 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி போன்ற எந்தவித வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக, குண்டும் குழியுமாக இருக்கிறது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்லாத நிலை இருந்து வருகிறது. புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
Related Tags :
Next Story