மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2021 5:23 PM IST (Updated: 19 Dec 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

போளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போளூர்

போளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்த அரிக்குமார், மண்டகொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரன், மாரிமுத்து ஆகிய 3 பேரின் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. 

இது குறித்து போளூர் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமயில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் ராஜா (வயது 25) என்பவரை நேற்று  போலீசார் கைது செய்தனர். 

அவர் கொடுத்த தகவலின்பேரில் 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story