ஆள்மாறாட்டம் மூலம் ரூ.3 கோடி வீட்டுமனை அபகரிப்பு


ஆள்மாறாட்டம் மூலம் ரூ.3 கோடி வீட்டுமனை அபகரிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 5:36 PM IST (Updated: 19 Dec 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகரில் ஆள்மாறாட்டம் மூலம் வீட்டுமனை அபகரிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகரில் தங்களுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 20 சென்ட் வீட்டுமனை ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக கமலா கவுர், மனோகர்லால் முத்தா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வீட்டுமனையை ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சரவணன் என்பவர் தனது பெயருக்கு ஒரு பொது அதிகார ஆவணத்தை பதிவு செய்து, அடையாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஷீலா என்பவருக்கு ரூ.3 கோடிக்கு கிரய ஒப்பந்தம் பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 39), ஆள்மாறாட்டம் செய்த அன்புமணி (44), பாஸ்கர் (39) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story