தூத்துக்குடியில் கார் கடத்தல்


தூத்துக்குடியில் கார் கடத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2021 6:39 PM IST (Updated: 19 Dec 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கார் கடத்தப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 28). ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை நேற்று முன் தினம் இரவு தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது காரை காணவில்லை. யாரோ மர்ம நபர் அதனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதன்மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story