முத்தையாபுரத்தில் சாலையில் சுற்றிய 12 மாடுகள் கோசலையில் அடைப்பு


முத்தையாபுரத்தில் சாலையில் சுற்றிய  12 மாடுகள் கோசலையில் அடைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 7:01 PM IST (Updated: 19 Dec 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி சாலைகளில் சுற்றித்திரிந்த 12 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசலையில் அடைத்தனர்

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி சாலைகளில் சுற்றித்திரிந்த 12 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசலையில் அடைத்தனர். 
மாடுகளை அப்புறப்படுத்த...
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் பிரதான சாலைகளில் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி பணியாளார்களுக்கு  ஆணையர் சாருஸ்ரீ உத்தவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா ஆலோசனையில், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் முத்தையாபுரம் போலீசார் இணைந்து சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
12 மாடுகள் பிடிப்பு
தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோடு, முத்தையாபுரம், பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த 12 மாடுகள் பிடிக்கப்பட்டன. பின்னர் பிடிப்பட்ட மாடுகள் வடக்கு காவலான் குறிச்சியிலுள்ள மாநகராட்சி கோசலையில் அடைக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்கள் பிடிபட்ட பெரிய மாடுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய மாடுகளுக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி அதற்கான ரசீதுகளை கொண்டு சென்றால் மீட்டுக்கொள்ளலாம் என்றும், மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story