சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2021 7:29 PM IST (Updated: 19 Dec 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகில் உள்ள வடகால் பகுதியைச் சேர்ந்தவர் யுவலட்சுமி (வயது 17). இவர் சிப்காட் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சரியாக படிக்காததால் அவரை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யுவலட்சுமி கடந்த 17-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். மகளை காணாதது கண்டு தாயாரும், உறவினர்களும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை. 

இந்தநிலையில் நேற்று யுவலட்சுமி வடகால் அருகில் உள்ள ஒரு தனியார் கிணற்றில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி ைவத்தனர். சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story