தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் கால் இறுதிக்கு தகுதி
கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன
கோவில்பட்டி:
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
தமிழ்நாடு அணி அபாரம்
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
4-வது நாளான நேற்று நடந்த முதலாவது போட்டியில் தமிழ்நாடு அணி 6-0 என்ற கோல் கணக்கில் இமாசல பிரதேச அணியை அபாரமாக வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அணி வீரர் அரவிந்த் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு பெற்றார்.
2-வது போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுவதாக இருந்த அந்தமான் நிக்கோபார் அணி வராததால், ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி அணி வெற்றி
3-வது போட்டியில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 4-வது போட்டியில் புதுச்சேரி அணி 6-2 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை தோற்கடித்தது. தொடர்ந்து நடந்த போட்டியில் பீகார் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
Related Tags :
Next Story