வீரியரக விதைகள் வழங்கியதால் பாகற்காய் சாகுபடி தொடக்கம்
வீரியரக விதைகள் வழங்கியதால் பாகற்காய் சாகுபடி தொடக்கம்
கூடலூர்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் கூடலூர் பகுதியில் வீரியரக விதைகள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பாகற்காய் சாகுபடி தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரியரக விதைகள்
கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் ஜூலை மாதம் விவசாயிகள் மழைக் கால பயிர்கள் நடவு செய்கின்றனர்.
தொடர்ந்து பருவமழை முடிவடைந்த உடன் கோடை வெயிலை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்தது. இதனால் விவசாயிகளால் பாகற்காய் சாகுபடி செய்ய முடியவில்லை. அத்துடன் வீரியரக விதையும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வீரியரக பாகற்காய் விதைகள் கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பாகற்காய் சாகுபடியை தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் தங்கள் விளைநிலங்களில் டிராக் டர் கொண்டு உழுது அவற்றை பண்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கேரளாவில் வரவேற்பு
வீரியரக விதைகள் மூலம் விளையும் பாகற்காய்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாகற்காய் பயிரிடப் படுகிறது. ஆனால் வீரியரக விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்த ரக விதைகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் தாராளமாக வழங்கப்படுகிறது. இதனால் பாகற்காய் விவசாயம் கூடலூர் பகுதியில் களைகட்டி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story