வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரம்


வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:11 PM IST (Updated: 19 Dec 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேளாங்கண்ணி:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாத பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குடில் அமைக்கும் பணி
இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story