ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமக்குடி,
பரமக்குடி பங்களா ரோடு பகுதியில் வசித்து வருபவர் நாக பாண்டி. இவரது மகன் வினோத் கண்ணன் (வயது21). இவர் கேட்டரிங் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவரது நண்பர்களுடன் காக்காத்தோப்பு பகுதியில் வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நீந்திச் சென்று திரும்பிய போது நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே அவரது நண்பர்கள் இதுகுறித்து நாக பாண்டியன் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வைகை ஆற்று பகுதியில் தேடி வினோத் கண்ணன் உடலை சடலமாக மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story