திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகளை அகற்றும் பணி


திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகளை அகற்றும் பணி
x
தினத்தந்தி 19 Dec 2021 9:47 PM IST (Updated: 19 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

குடவாசல்:-

திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் கோபுரத்தில் செடி, கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

வீழிநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் வீழிநாதர் கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோவில் மிகவும் பழமையான, தேவார பாடல் பெற்ற சிவன் கோவிலாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் ராஜகோபுரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இதையொட்டி சுவாமி, அம்பாள் கோபுரங்களிலும் பராமரிப்பு பணி நடைபெறும். கோபுரங்களில் முளைக்கும் செடி, கொடிகளால் கோபுரங்களில் உள்ள சிலைகள் சிதலம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

120 அடி உயரம்

வழக்கம்போல் இந்த ஆண்டு கோவில் கோபுரங்களில் பராமரிப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இக்கோவில் ராஜகோபுரம் 120 அடி உயரம் கொண்டதாகும். இந்த கோபுரத்தில் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் ஏறி, செடி, கொடிகளை வெட்டி அப்புறடுத்தி வருகின்றனர். 
ராஜகோபுரத்தின் மீது உள்ள சிலைகள் சிதலம் அடையாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

Next Story