திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சத்யராஜ்(வயது 27). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சத்தியாஜின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். சத்தியராஜின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை? இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். சத்தியராஜிக்கு செவ்வந்தி(24) என்கிற மனைவியும், புவஸ்ரீ(4) என்கிற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story