‘சிறகுகள் 100’ திட்டத்தில் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடல்


‘சிறகுகள் 100’ திட்டத்தில் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:54 PM IST (Updated: 19 Dec 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக ‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் உள்ள 5 மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக அரசு பள்ளியில் 8,9, மற்றும் பிளஸ்-1 வகுப்பு பயிலும் தலா 20 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்ட 100 பழங்குடியின மாணவ, மாணவர்களின் சுய சிந்தனைகளை வளர்க்கும் விதமாக ‘சிறகுகள் 100’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கு உதவும் வகையிலான உபகரணங்களை பரிசாக வழங்கினார்.

அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story