விடைபெறுகிறேன் என ஸ்டேட்டஸ் பதிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்
விடைபெறுகிறேன் என வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 29). இவர், சாலையோரத்தில் துரித உணவு கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் திருமண ஏக்கம் அவரை வாட்டியது.
இதில் மனம் உடைந்த அவர், தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ‘விடைபெறுகிறேன் அனைவருக்கும் நன்றி’ என்று பதிவு செய்து விட்டு வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், விரைந்து சென்று பால்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story