‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 19 Dec 2021 10:07 PM IST (Updated: 19 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழி சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை நகர பகுதியில் கீழ நாஞ்சில்நாடு பகுதி தம்பிக்கு நல்லான் பட்டினம் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலையின் நடுவில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்தஇடம் அபாய பள்ளம்போல் காட்சி அளிக்கிறது.  மேலும் அதன் வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் அந்த வழியாக செல்லும் போது பள்ளத்தில் தவறிவிழுந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், கீழநாஞ்சில்நாடு.

பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் கிராம ஊராட்சி தெருக்களில் தெருவிளக்குகள் இரவு மற்றும் பகல் என 24 மணி நேரமும் ஒளிர்கின்றன. இந்த பகுதியில் அடிக்கடி மின் விளக்குகள் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் பகலில் ஒளிராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பொதுமக்கள், பட்டமங்கலம் கிராமம்.

Next Story