கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் ஸ்டார் விற்பனை சூடுபிடித்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் ஸ்டார் விற்பனை சூடுபிடித்தது
நாமக்கல்:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் மாதம் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகள் முன்பு ஸ்டார் கட்டி தொங்க விடுவார்கள். இதேபோல் தேவாலயங்களையும் அலங்கரித்து வைப்பது வழக்கம்.
அதன்படி நாமக்கல் நகரில் உள்ள கடைகளில் ஸ்டார் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஸ்டாரின் தரத்தை பொறுத்து ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் கிறிஸ்துமஸ் மரம் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அலங்கார பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. கிறிஸ்தவர்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்வதையும், ஆங்காங்கே வீடுகளில் ஸ்டார் தொங்கவிட்டு இருப்பதையும் காணமுடிகிறது.
மேலும் இரவு நேரங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களை சந்தித்து இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த செய்தியை அறிவித்து இனிப்பு வழங்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story