சேதம் அடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்


சேதம் அடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 19 Dec 2021 10:27 PM IST (Updated: 19 Dec 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தேனி: 


சேதம் அடைந்த பள்ளி கட்டிடம்
நெல்லையில் கடந்த 17-ந்தேதி பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்துள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 940 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 96 பள்ளிகளில் பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. 

இடித்து அகற்றும் பணி
அதன்படி நேற்று கீழக்கூடலூரில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய பூங்கா நடுநிலைப்பள்ளியில் உள்ள பழமையான கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். 

அப்போது பள்ளிக்கு முன்புறம் உள்ள சாக்கடை கால்வாயின் மேற்பகுதியை மூடுவதற்கும், அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த பணியின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தண்டபாணி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ச்சுணன், உத்தமபாளையம் கல்வி அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த மாத இறுதிக்குள் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story