பேரணாம்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல்


பேரணாம்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Dec 2021 10:37 PM IST (Updated: 19 Dec 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிக்குத்தி ஊராட்சியில் அருந்ததியர் குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள குட்டைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. மேலும் அங்குள்ள நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள கால்வாய் மேடாக அமைந்திருப்பதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கியது.

தற்போது மழை நீருடன் கழிவுநீரும் தேங்கியது உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இ்ந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று காலை பேரணாம்பட்டு -மேல்பட்டி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நடவடிக்கை

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, ஒன்றிய திமு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட் மற்றும் பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக மோட்டார் மூலம் தேங்கிய நீரை அகற்றி கழிவுநீரை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். 

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் இதனை ஏற்று அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story