சதுரகிரி மலைப்பாதையில் வந்த கரடியால் கீழே இறங்க முடியாமல் தவித்த பக்தர்கள்


சதுரகிரி மலைப்பாதையில் வந்த கரடியால் கீழே இறங்க முடியாமல் தவித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:36 AM IST (Updated: 20 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி மலைப்பாதையில் வந்த கரடியால் கீழே இறங்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இவர்களை வனத்துறையினர் மீட்டனர்.

வத்திராயிருப்பு, 
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் பவுர்ணமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் இரவு நேரங்களில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தடையை மீறி மலைப்பகுதியிலிருந்து அடிவாரப்பகுதிக்கு 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது 11 மணி அளவில் சங்கிலிப்பாறை பகுதிக்கு வந்தபோது அப்பகுதியில் கரடி தென்பட்டுள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கேயே நின்று என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருந்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து அவர்கள் சங்கிலிப்பாறை பகுதிக்கு விரைந்து சென்று பக்தர்களை மீட்டனர். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து இரவு நேரங்களில் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய பக்தர்களிடம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 


Next Story