தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:41 AM IST (Updated: 20 Dec 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா, துணை தலைவர் கல்வத், செயற்குழு உறுப்பினர் சலிம்தீன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஷ்தார், எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பாளையங்கோட்டை தொகுதி சிந்தா, ஆட்டோ சங்க தலைவர் செய்யது மைதீன் மற்றும் பல்வேறு கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story