காரில் சென்றவர்களை தாக்கி 21 பவுன் நகை வழிப்பறி


காரில் சென்றவர்களை தாக்கி 21 பவுன் நகை வழிப்பறி
x
தினத்தந்தி 20 Dec 2021 12:42 AM IST (Updated: 20 Dec 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே காரில் சென்றவர்களை தாக்கி 21 பவுன் நகையை மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.

காரியாபட்டி, 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கொப்புசித்தம்பட்டி, வடக்குபட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 47). இவருடைய உறவினர்கள் ராஜேந்திரன், பாலமுருகன். இவர்கள் 3 பேரும் ஜெய்சங்கருக்கு சொந்தமான காரில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பின்னர் தனது சொந்த ஊரான கொப்புசித்தம்பட்டி செல்வதற்கு நத்தம்பட்டி கிராமத்திலிருந்து கொப்புசித்தம்பட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். 
அப்போது காருக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் காரை முந்தி சென்று காரை வழிமறித்தனர். இதையடுத்து காரை அவர்கள் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கிய 4 பேர், காரில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். 
பின்னர் காருக்குள் இருந்த ஜெய்சங்கர், ராஜேந்திரன், பாலமுருகன் ஆகியோரை அடித்து காயப்படுத்தினர். இதையடுத்து ஜெய்சங்கரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் தங்க காப்பு, 3 பவுனில் 2 மோதிரங்கள் ஆக மொத்தம் 21 பவுன் நகைகளையும், ரூ.4,800-யும், ஒரு செல்போனையும் பறித்து கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.  இதுகுறித்து ஜெய்சங்கர் எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story