மாவட்ட அளவிலான செஸ் போட்டி


மாவட்ட அளவிலான செஸ் போட்டி
x
தினத்தந்தி 20 Dec 2021 12:55 AM IST (Updated: 20 Dec 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட செஸ் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டியை நடத்தினர். இதில் 5 வயது முதல் 50 வயதுவரை உள்ளோர் கலந்து கொண்டனர். பெண்களுக்கென்று தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. போட்டியினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் விஜயகுமாரி தொடங்கிவைத்தார். முன்னாள் துணை ஆளுனர் கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை செஸ் சங்கத்தினரும், ரோட்டரி சங்க நிர்வாகிகளும் செய்திருந்தனர்.


Next Story