பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதை திட்டப்பணிகள் திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான இருவழி ரெயில் பாதை திட்டப்பணிகள் திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருவழி ெரயில் பாதை
மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ெரயில்வே பாதை திட்ட பணி 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்ற உறுதியுடன் தொடங்கியது. மதுரையிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வரையிலும் இருவழி ெரயில் பாதைதிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான திட்ட மதிப்பீடு அப்போது ரூ. 3,400 கோடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் அனைத்து பணிகளும் முடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கான இருவழி ெரயில் பாதை திட்ட பணி பிப்ரவரி 2022-ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று ெரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
கேள்விக்குறி
ஆனாலும் பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு வேகமாக நடைபெறவில்லை. இந்நிலையில் மதுரையிலிருந்து பழங்காநத்தம் வரையிலும், திருமங்கலத்திலிருந்து துலுக்கப்பட்டி வரையிலும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் உள்ள ெரயில் பாதை ஆய்வு செய்யப்பட்டு சான்றுஅளிக்கப்பட்டுள்ளது.
பழங்காநத்தத்தில் இருந்து திருமங்கலத்திற்கு இடையிலும் துலுக்கப்பட்டியில் இருந்து கோவில்பட்டி வரையிலும் இருவழி ெரயில் பாதைதிட்ட பணிகள் தாமதமாகவே நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் துலுக்கப் பட்டியில் இருந்து சாத்தூர் உப்போடை வரை பணிகள் முடிவடைந்த நிலையில் உப்போடையில் இருந்து கோவில்பட்டி வரையிலான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போதைய நிலையில் மத்திய ெரயில்வே அமைச்சகம் அறிவித்தபடி தென்மாவட்டங்களுக்கான இருவழி ெரயில் பாதை வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நடவடிக்கை
தற்போதைய நிலையில் பணிகள் 70சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவடைவதற்கு இன்னும் கால தாமதமாகும் என சொல்லப்படுகிறது. ெரயில்வே நிர்வாகமும் பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிக்கிறது.
எனவே மத்திய ெரயில்வே அமைச்சகம் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ரெயில் பாதையை விரைந்து முடித்து திட்டமிட்டபடி வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story