நெற்களம் இல்லாததால் சாலையில் கொட்டப்படும் நெல்
அறுவடை பணிகள் தீவிரமாக நடைெபற்று வரும் நிலையில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் கொட்டப்படுகிறது.
வத்திராயிருப்பு,
அறுவடை பணிகள் தீவிரமாக நடைெபற்று வரும் நிலையில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் கொட்டப்படுகிறது.
அறுவடை பணி
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நெற் களம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வத்திராயிருப்பு புதிய பஸ் நிலையத்தையும், வத்திராயிருப்பு இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையையும், வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையையும் இப்பகுதி விவசாயிகள் நெற் களமாக மாற்றியுள்ளனர்.
நெற்களம்
வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெல் மழை காலங்களில் சேதம் அடைந்து வருவதாகவும், இதனால் குறைந்த விலைக்கே நெல் விலை போவதாகவும் வேதனையுடன் விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் நெல்லை பிரதானமாக சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அறுவடை செய்த நெல்லை காய வைக்க நெற்களம் இல்லை. ஆதலால் பஸ் நிலையங்களிலும், சாலைகளிலும் உலர வைக்்க வேண்டிய நிலை உள்ளது. சாலையில் நெல்லை உலர வைக்கும் போது மழையில் நனைந்து சேதமாகிறது.
நெற்களம் இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்படாது. அறுவடை செய்யப்படும் நெல்லை சாலைகளில் கொட்டப்படுவதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வத்திராயிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு அறுவடை செய்யப்படும் நெல் பயிர்களை உலர வைக்க நெற்களம் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story