அ.தி.மு.க. பிரமுகரின் செல்போன் கண்காணிப்பு
கே.டி.ராஜேந்திரபாலாஜியை தேடுதல் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. அதேபோல அ.தி.மு.க. பிரமுகரின் செல்போன்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்,
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசி முடித்தவுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் அவரது இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசாருக்கு எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்த தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என குற்றப்பிரிவு போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகரின் செல்போன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story