செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்


செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 1:45 AM IST (Updated: 20 Dec 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை:
நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

செப்பறை அழகிய கூத்தர் கோவில்
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த செப்பறை அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். காலை 11.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இயற்கை எழில் சூழ்ந்த ரதவீதியில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இதில் நெல்லை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று ஆருத்ரா தரிசனம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் நடைபெறுகிறது. 
மதியம் 1.30 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், அழகிய கூத்தர் வீதி உலாவும் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடக்கிறது.

Next Story