கடல் சீற்றத்தால் படகு சேவை தாமதம்


கடல் சீற்றத்தால் படகு சேவை தாமதம்
x

கடல் சீற்றத்தால் படகு சேவை தாமதம்

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் படகு சேவை தாமதமாக இயக்கப்பட்டது.
கன்னியாகுமரி
சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி  படகுகள் இயக்கப்படுகிறது.
கடல் சீற்றம்
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். 
பின்னர் அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண்பதற்காக படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷத்துடன் கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது.
படகு சேவை தாமதம் 
இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை நிறுத்தப்பட்டது. எனவே படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 
பின்னர் மதியம் 2 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

Next Story