திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா


திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா
x
தினத்தந்தி 20 Dec 2021 2:12 AM IST (Updated: 20 Dec 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா அடுத்தமாதம்(ஜனவரி) 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

திருவையாறு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா அடுத்தமாதம்(ஜனவரி) 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. 
தியாகராஜர் ஆராதனை 
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் இசை கலைஞர்கள், கர்நாடக இசை பாடகர்கள், திரைப்பட பாடகர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு 175-வது தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 
பந்தக்கால் நடும் நிகழ்ச்சி 
விழாவை முன்னிட்டு வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவரும், தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி. கலந்துகொண்டு பந்தக்காலை நட்டு விழாவை தொடங்கி வைக்கிறார். 
விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தியாக பிரம்ம  மகோத்சவ சபா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Next Story