எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் 162 பேர் கைது
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் 162 பேர் கைது
நாகர்கோவில்:
கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்காததால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர் சத்தார் அலி உள்பட 162 பேரை போலீசார் கைது செய்து, வாகனத்தில் ஏற்றி சென்று, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story