மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும்-கலெக்டர் கார்மேகம் தகவல்


மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும்-கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2021 3:07 AM IST (Updated: 20 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

ஏற்காடு:
மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
குறைதீர்க்கும் முகாம்
ஏற்காடு அருகே குண்டூரில் தெப்பகாடு, காசிக்கல், கீத்துகாடு ஆகிய பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் சாலை, குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு வசதி மற்றும் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட  160 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதன்படி மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தப்படும். மேலும் அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சாதி சான்றுகள்
ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 140 பேருக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெண்குழந்தைகள் சிறப்பாக கல்வி பயின்று அரசால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு அரசு பணியில் சேர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை
முன்னதாக ஏற்காடு படகு இல்ல பகுதியில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கழிவுநீர் செல்லும் பாதைக்கு மாற்று ஏற்பாடு செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோன்று குண்டூர் முதல் ஏற்காடு அடிவாரம் வரை மலைபாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து வனத்துறை, நெடுஞ்சாலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் திட்ட இயக்குனர் (பொறுப்பு) செல்வம், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செங்கோடன், கால்நடை பராமரிப்புதுறை மண்டல இயக்குனர் புருசோத்தமன், வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story