சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அடையாறு சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்.) இருந்து மலர் ஆஸ்பத்திரி நோக்கி செல்லும் வாகனங்கள் சி.பி.டி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப இயலாது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகும் இச்சந்திப்பில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வசதி இல்லாத காரணத்தினால் ராஜீவ்காந்தி (ஓ.எம்.ஆர்.) சாலையில் காணகம் பகுதியிலிருந்து வந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் ‘யு‘ டர்ன் திரும்ப வழி வகை செய்யப்பட்டது.
சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே அமலில் உள்ள ‘யு’ டர்ன் திருப்பம் மூடப்படுகிறது. இந்த வகை போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு பயனளிப்பதாக உள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story