வியாசர்பாடியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது
வியாசர்பாடியில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி, சர்மா நகர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும், வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது வங்கியின் ஜன்னல் கதவை உடைத்து 2 பேர் வெளியே வந்தனர். அவர்களை போலீசார் மடக்கிபிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ேநபாளத்தைச் ேசர்ந்த தான் பகதூர் (40), சாகர் பகதூர் (30) என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள், நள்ளிரவில் வங்கியின் முன்பக்க கிரில் கேட்டில் உள்ள பூட்டை உடைத்தனர். ஆனால் ஷட்டர் கதவில் உள்ள பூட்டை உடைக்க முடியாததால் வங்கியின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் வங்கியில் அறை முழுவதும் தேடியும் பணம் எதுவும் சிக்கவில்லை. அதற்குள் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஜன்னல் வழியாக வங்கியில் இருந்து வெளியே தப்பி வந்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது. இவர்கள் வங்கியின் பூட்டை உடைத்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story