சரக்கு ரெயில் தடம் புரண்டது
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டது. மாடு சிக்கியது காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரண நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டது. மாடு சிக்கியது காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரண நடத்தி வருகின்றனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு இன்று மதியம் 2 மணி அளவில் 55 காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் புறப்பட்டு சித்தேரி ரெயில் நிலைய இணைப்பு லைனில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயிலின் 14-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதனை அறிந்த ரெயில் டிரைவர் சரக்கு ரெயிலை உடனே நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
குறைந்த வேகத்தில் சரக்கு ரெயில் சென்றதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது சரக்கு ரெயில் சென்ற ரெயில் பாதையில் பசு மாடு ஒன்று சிக்கி இறந்த நிலையில் கிடந்தது.
மாடு சிக்கியதா?
எனவே அந்த மாடு சரக்கு ரெயிலில் சிக்கியதால் சக்கரம் தடம் புரண்டதா? அல்லது அதே பாதையில் ஏற்கனவே சென்ற ரெயிலில் மோதி இறந்துள்ளதா? என்ற கோணத்திலும், சரக்கு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்தும் ரெயில்வே அதிகாரிகளும் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் மார்க்கு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹேமந்த், அன்புசெழியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தடம் புரண்ட சரக்கு ரெயிலின் சக்கரத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சரி செய்தனர்.
இதனால் பயணிகள் ரெயில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரெயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story