மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக பாதுகாப்பு அறைக்குள் பாம்பு புகுந்தது ஆசிரியர்கள்-மாணவர்கள் அதிர்ச்சி
புத்தக பாதுகாப்பு அறைக்குள் பாம்பு புகுந்தது
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடத்தில் உள்ள புத்தக பாதுகாப்பு அறைக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜகுமார் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் பாலு, தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது புத்தக பாதுகாப்பு அறையை முழுமையாக மூடி வைப்பது என்றும், உரிய அனுமதி கிடைத்த பிறகு அங்கு உள்ள புத்தகங்களை அப்புறப்படுத்திவிட்டு, பாம்பை பிடித்து அப்புறப்படுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத வகுப்பறைகள், ஆய்வு கூடத்தை எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெல்லையில் சமீபத்தில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பள்ளி அறையில் பாம்பு புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story